32. மூர்க்க நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 32
இறைவன்: வேதபுரீஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை
தலமரம் : வேலம்
தீர்த்தம் : வேலாயத தீர்த்தம்
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருவேற்காடு
முக்தி தலம் : கும்பகோணம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை - மூலம்
வரலாறு : தொண்டை நாட்டில் திருவேற்காடு என்னும் பதியில் அவதாரம் செய்தார். சிவனடியார்களுக்கு அமுது படைக்க செல்வம் குறைந்ததால் சூதாடி வென்ற பொருளைக் கொண்டு அடியார்களை ஆதரித்து வந்தார். சூதாட்டத்தில் மாறுபடுவோரை உடைவாளினால் குத்தியதன் காரணமாக இவரை மூர்க்க நாயனார் என்றே அழைத்தனர்.
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு – 600077 திருவள்ளூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 –08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 044-26800430

இருப்பிட வரைபடம்


இருளாரும் மணிகண்டர் அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங்கமுதுசெய்வித் தின்புறுவார்.

- பெ.பு. 3630
பாடல் கேளுங்கள்
 இருளாரும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க